இந்தியாவில் வெள்ளிக்கிழமை மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 62 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
எம்பி கார்த்தி சிதம்பரம் கோபம்!
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லாபத்தில் இயங்கிய நிறுவனங்களை தனியாருக்கு விற்றதில்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்பி பெருமையுடன் தெரிவித்தார்.
அமைச்சர் கொடுத்த உறுதி!
மின் வாரியத்தில் காலி பணியிடங்கள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளை 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
நாளை (ஆகஸ்ட் 26) 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
நெஞ்சை அதிர வைக்கிறது - கமல்ஹாசன்
கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவை !
மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
போதை மாத்திரை விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது !
திருச்சியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.