கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்கா அலுவலகம் முன்பு விவசாயி கோபால் சாமியைத் தாக்கிய
ஆர்ப்பாட்டத்தில் விவசாயி கோபால்சாமியைத் தாக்கிய முத்துச்சாமி, அதிகாரிகளுக்குத் தகவல் அளித்த விஏஓ கலைச்செல்வி உள்ளிட்டோரைக் கைது செய்யவும் நிரந்த பணி நீக்கம் செய்யவும் பொய் வழக்குப் பதியப்பட்ட விவசாயி மீதான வழக்கினை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தின் முடிவில் அங்கிருந்த விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட, தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை அவர்களே பொறுக்கி வாகனத்தில் அள்ளிச் சென்றனர்.
சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட போராட்டத்தில் பயன்படுத்தி வீசப்பட்ட குடிநீர் பாட்டில்களை விவசாயிகளே பொறுக்கி எடுத்துச் சென்றது அவர்கள் மீதான மரியாதையை உயர்த்துகிறது.