இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக கோவிட் -19 க்கு எதிரான உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா இதுவரை 5 வகை தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் அளித்து நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான 6அவது தடுப்பூசியாக ஜைகோவ்-டி (ZyCoV-D) என்ற தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியா அங்கீகரித்துள்ளது.
இதனை 12 முதல் 18 வயது வரையிலானோருக்கு முதற்கட்டமாக வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தார், ஜைகோவ்-டி (ZyCoV-D) என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.
உலகின் முதலாவது கொரோனா வைரசுக்கு எதிரான ‘டி.என்.ஏ.’ தடுப்பூசி இதுவாகும். மூன்று டோஸ் ஆக செலுத்தப்படும் இந்த தடுப்பூசி ‘இன்ஜெக்டர்’ மூலம் செலுத்தப்படுகிறது. மேலும் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த தடுப்பூசியை தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதித்து உள்ளனர்.
குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கு ஜைகோவ்-டி (ZyCoV-D) என்ற தடுப்பூசி செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.