free website hit counter

சென்னையில் நாளை 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாளை (ஆகஸ்ட் 26) 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதல் மற்றும் இரண்டாம் தவணை என இதுவரை மொத்தம் 36.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களே இல்லை என்ற நிலையை எட்டும் நோக்கத்தில் நாளை (ஆகஸ்ட் 26) சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருநகர மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில், வார்டுக்கு 2 என்ற வீதத்தில் மொத்தம் 400 சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

முகாம் குறித்த விபரங்களை, http://covid19.chennaicorporation.gov.in/covid/mega_camp என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction