free website hit counter

2021 இன் சிறந்த புகைப்படங்கள் !

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2021 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்களுக்கான போட்டி ஒன்றின் முடிவுகளை, புகைப்படங்களுக்கான சமூக வலைத்தளமான Flickr அறிவித்துள்ளது.

போட்டிக்கு வந்த 13,500 அற்புதமான புகைப்படங்களில் இருந்து ஆறு வகைகளில் நடுவர்கள் அவற்றினை வகை செய்து, வெற்றியாளர்களை அறிவித்துள்ளனர். இந்தப் போட்டியில் தெரிவான படங்களின் வரிசையில் முதலாவதாக இருப்பது, விலங்குகள் வகைப்பிரிவில், புகைப்படக்கலைஞர் கேப்ரியல் விண்டரின் "ஸ்வார்ம் ஆஃப் இன்டெலிஜென்ஸ்" எனும் கறுப்பு வெள்ளைப் படமாகும்.

ஜெர்மனியின் க்ரூன்பெர்க்கில் வசிக்கும், கேப்ரியல் விண்டர் (Gabriele Winter) இந்தப் புகைப்படத்தை தான் எவ்வாறு பதிவு செய்தேன் எனக் கூறுகையில், “பறவைகளின் கூட்டம் என் ஆர்வம். பறவைகள் பறக்க பிறந்தவை, எனவே அவை பறக்கும்போது அவற்றை புகைப்படம் எடுக்க வேண்டும். நான் நிறைய பயணம் செய்கிறேன், அவற்றை புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறேன். இது எப்போதும் நன்றாக வேலை செய்யாது. ஆனால் அது எனக்கு சவால் விடுகிறது. இந்தப்படத்தில் மரம் மிகவும் நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டதால் இந்தப் புகைப்படம் ஒரு கடவுளின் வரம். என்னைப் பொறுத்தவரை புகைப்படம் எடுத்தல் என்பது தியானம்; நான் அதில் மூழ்கி என் பார்வையில் கவனம் செலுத்துகிறேன். " என்றார்.

வெற்றி பெற்ற ஏனைய படங்களை கீழ்வரும் இணைப்பினில் காணலாம்;

https://bit.ly/3KRwS9H

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction