free website hit counter

இந்தியாவின் 73வது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்திகளின் படங்களும் விபரங்களும் !

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியயாவின் 73ஆவது குடியரசு தினம் நேற்று நடைபெற்றது. புது டில்லியில் நடைபெற்ற கொண்டாட்டங்களின்போது இடம்பெற்ற அலங்கார ஊர்த்திகளின் அணிவகுப்பின் படங்களும் வரலாற்றுத் தகவல்களும்.

1. விமான போக்குவரத்து துறை : சிறு நகரங்களுக்கு சேவையை விரிவு செய்யும் #UDAN திட்டம், பௌத்த வரலாற்று நகரங்களை சர்வதேச சுற்றுலாவுக்காக இணைப்பது பற்றி விவரிக்கிறது.


2. கல்வி அமைச்சக ஊர்தியில் வேதகால குருகுலக் கல்வி முதல் மெட்டா வெர்ஸ் #Metaverse வரை நமது மாற்றங்களை அது பிரதிபலிக்கிறது. இணையம், கற்றல், கற்பித்தல், பயிற்சி முறைகள், அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் படம் அதில் இடம் பெற்றுள்ளது.


3. மகாராஷ்டிரா - எதிர்க்கட்சிகள் கூட்டணியுடன் ஆளும் மாநிலம். அங்குள்ள பல்லுயிர் பெருக்கம், மாநில உயிரனங்கள் ( நீல வண்ணத்துப்பூச்சி, அரிய வகை புலி) காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

4. குஜராத் - நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் படையினரால் கொல்லப்பட்ட பழங்குடி இன மக்களின் சோகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது வருத்தம் தரும் செய்தி.

5. ஹரியானா - விளையாட்டுத் துறையில் அம்மாநில சாதனை. ஒலிம்பிக் பதக்க வேட்டையிலும் சரி, பாராலிம்பிக் போட்டிகளிலும் சரி அம்மாநிலம் முதன்மையான பங்களிப்பை பறைசாற்றுகிறது.

6. அருணாச்சல பிரதேசம் - 1800களின் பின் பகுதியில் தொடங்கி 1912 வரை நடைபெற்ற பிரிட்டிஷ் மற்றும் மலைவாழ் பூர்வகுடியினர் யுத்தம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.Anglo Abor (Adi) War - ஆங்லோ- அபோர் ஆதிவாசிகள் போர் என்று கூகுள் செய்தால் எத்தனை முறை மலைவாழ் இனத்தவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தை அசாம் தேயிலை தோட்டங்களில் இருந்து விரட்டி அடித்துள்ளனர் என்று அறியலாம்.

7. தகவல் தொடர்பு அமைச்சகம் - அஞ்சல் துறையின் கடைசி கிராமம் வரையிலான அதன் சேவையை வெளிக்கொணர்ந்துள்ளது.

8. பொதுப் பணித்துறை - இந்திய சுதந்திரப் போராட்டத்தில் INA, திரு. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் மகத்தான சேவையை உருவகப்படுத்தியுள்ளது.

9. கடற்படை - இந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் 48 மணி நேரத்திற்கு ஒரு முறை கடலுக்கு அடியில் இருந்து வெளிவர வேண்டிய தேவையே உள்நாட்டு ஆராய்ச்சி மூலம் பதினைந்து நாள்கள் வரை தாங்கும் பேட்டரி சார்ஜிங் ஆய்வு வெற்றியை பறைசாற்றுகிறது.



10. DRDO - உலகின் மிகச்சிறந்த இலகுரக விமானமங்களில் ஒன்றான தேஜாஸில் பயன்படுத்த இந்தியா உருவாக்கிய சென்சார்கள், ஆயுதங்கள், மின்னணு தளவாடங்கள் குறித்து சொல்கிறது.

11. சத்தீஸ்கர் - மாடுகளின் சாணத்தை அரசே கிலோ ரூ.2 க்கு வாங்கி அதனை உரமாக மாற்றி மறுசுழற்சிக்கு உதவி செய்யும் வெற்றிகரமான #Gauthan திட்டம் பற்றி கவனம் ஈர்க்கிறது.

12. கர்நாடகா - மண் பொம்மைகள் முதல் சுடு சிற்பங்கள் வரை அதன் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் திறனைப் போற்றும் வகையில் அதன் சிறப்புகள் நிறைந்து ஊர்தி உருவாக்கப்பட்டுள்ளது.


13. பஞ்சாப் - எதிர்கட்சி மாநிலம். திரு. பகத் சிங், திரு. சுகதேவ், திரு. ராஜகுரு ஆகியோர் வெள்ளயரை எதிர்த்து போராடிய காட்சியும், திரு. லாலா லஜபதி ராய் சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தையும், ஜாலியன் வாலாபாக் படுகொலையையும் காட்சிப்படுத்துகிறது.


14. கோவா - போர்த்துகீசியர்களை எதிர்த்தவர்களை சிறை வைத்த அகுவாடா #aguadafort கோட்டையையும், அம்மாநில பூர்வகுடியினரான கும்பி இனத்தவரையும் வடிவமைத்து உள்ளது.


15. மேகாலயா - மூங்கில் வளர்ப்பு, பாரம்பரிய மஞ்சள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் வாழ்வாதாரம் உயர்ந்து வருவதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

நன்றி : தகவல் Chakkravarthy Mariappan

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction