free website hit counter

நாட்டு மக்களின் ஏமாற்றத்திற்கு காரணமாகியுள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஏற்கனவே அணிதிரண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

2001-2002 காலப்பகுதியில் இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வரும் போது, மிகப் பலமான நிலையில் இருந்தனர் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை வரும் ஒக்டோபர் 04ம் திகதி முதல் 30ம் திகதிவரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையிலான அவசர சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. 

மற்ற கட்டுரைகள் …