எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், புதிய ஜனாதிபதி ஒக்டோபர் 14ஆம் திகதிக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சுதந்திர தினச் செய்தியில், தேசத்தை மீளக் கட்டியெழுப்பும் உன்னதப் பணிக்கு தங்களின் அதிகபட்ச ஆற்றலைப் பங்களிக்குமாறு இங்கும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில் அடுத்த வருடம் ஆறாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.