2025 ஆம் ஆண்டளவில் மோட்டார் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை இலகுபடுத்துவதற்கான ஆரம்ப வரைபடத்தை இலங்கை அதிகாரிகள் வகுத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
வரி தாக்கங்கள் மற்றும் கையிருப்பு திரட்சிகளின் விளைவுகளை விவரிக்கும் ஒரு விரிவான திட்டம் ஜூன் 15, 2024 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.8 சதவீதத்தை இலங்கை எதிர்பார்க்கிறது.
மேலும், 2024 மே மாத முடிவிற்குள் எஞ்சியுள்ள பரிவர்த்தனை கட்டுப்பாடுகள், பல நாணய நடைமுறைகள் (MCP) மற்றும் மூலதனப் பாய்ச்சல் நடவடிக்கைகள் (CFMs) ஆகியவற்றை உள்ளடக்கிய எஞ்சியிருக்கும் நிர்வாகச் செலுத்தல் சமநிலை (BoP) நடவடிக்கைகளை அகற்றுவதற்கான திட்டத்தை வகுக்க இலங்கை உறுதியளித்துள்ளது.
IMF 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ் இரண்டாவது மதிப்பாய்வை நிறைவுசெய்தது, அதிகாரிகள் SDR 254 மில்லியன் (சுமார் 336 மில்லியன் டாலர்) பெற அனுமதித்தது. இது இதுவரை வழங்கப்பட்ட மொத்த IMF நிதி உதவியை SDR 762 மில்லியனாக (சுமார் 01 பில்லியன் டாலர்) கொண்டு வருகிறது.