சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய முறைமை கண்டறியப்படும் வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மாகாண சபை முறைமை தற்போதைய வடிவத்திலேயே தொடரும் என NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தேசிய பிரச்சினைக்கு மாகாண சபை முறைமையை தீர்வாக NPP ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
மாகாண சபையானது தமக்கு கிடைத்த உரிமை என தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் நம்புவதாகவும், அந்த முறைமையை நீக்குவது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் திஸாநாயக்க தெரிவித்தார்.
"நாங்கள் இடைக்காலத் தீர்வாக மாகாண சபை முறையைத் தொடர்வோம். அது நிரந்தரத் தீர்வாகாது என்று நாங்கள் நம்புகிறோம். நிரந்தரத் தீர்வைக் கண்டறியும் வரை மாகாண சபை முறையை தற்போதைய வடிவத்தில் தொடர்வதே எங்கள் கொள்கை" என்று அவர் கூறினார்.