வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றும் அரசியல்வாதிகளை கவனத்தில் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் (TNA) தமிழ் மக்களுக்கும் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளித்த அதே அரசியல் கட்சிகள் தற்போது மாறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுவும் இக்கட்சிகளின் இரட்டை வேடத்திற்குச் சான்றாகும் என்றார்.
																						
     
     
    