இலங்கைத் தலைநகர் கொழும்பில் நேற்றுக்காலை காலிமுகத்திடலில் அமைதியாக நடந்து வந்த ஆர்பாட்டக்காரர்களினை நோக்கி மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பெரிதாகி நாடாளாவிய ரீதியில், அரசாங்க உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாகவும், அவர்களது சொத்துக்களுக்குச் சேதங்களையும் விளைவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா - பொது மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் - பல இடங்களில் கலவரங்கள் !
நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் மஹிந்தராஜபக்ஷ பதவி விலக வேண்டும் எனப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இன்று அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை முழுவதற்கும் ஊரடங்கு உத்தரவு !
இலங்கை மேல் மாகாணத்திற்குப் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு, தற்பேபாது நாடு முழுவதற்குமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலிமுகத்திடலில் கலவரம் வெடித்தது !
இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுகத்திடலில் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த கோட்டாகோகம, மைனாகோகம ஆகிய இடங்கள் கலவரபூமியாக மாறின.
கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது
பிரதமர் மஹிந்த உள்ளே - வெளியே போராட்டங்கள் !
இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஊகங்கள் வெளியிடப்பட்ட நிலையில், அலரிமாளினை முன்பாக பிரதமருக்கு ஆதரவாகவும், எதிராவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இலங்கையில் இன்று பாரிய அளவில் ஹர்த்தால் !
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்குப் பொறுப்பேற்று, ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வெளியேறுமாறு நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில், இன்று நாடாளவிய ரீதியில் ஹர்த்தால், மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.