தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ‘கருணா அம்மான்’ என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்கவுள்ளார்.
புதன்கிழமை பாணந்துறையில் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) புதிய அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருணா அம்மான் தனது முடிவை அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கருணா அம்மான், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாராட்ட வேண்டும் என்றார்.
“எல்லோருக்கும் வரலாறு தெரியும். முன்னாள் ஜனாதிபதி தொழில்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் உட்பட அனைத்து துறைகளையும் கெடுத்துவிட்டார், ”என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் நாட்டின் நிலைமை முன்னேற்றமடைந்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
"அடுத்த வாய்ப்பு அவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். அதனால்தான் நானும் அவருக்கு ஆதரவாக இருக்கிறேன். குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் சந்தேகமில்லாமல் அவருக்கு வாக்களிக்கப் போகிறார்கள். அனைத்து மக்களும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.