free website hit counter

தமிழகத்தை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றுக்கள் ஒரளவு குறைந்து வரும் நிலையில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் கட்டம் கட்டமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது எனவும், ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர் வி.கே.பால் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 5ந் திகதியுடன் காலவதியாகிறது.

இந்தியாவில் ஜி.எஸ்.டி எனும் ஒரே வரி முறை திட்டம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து 66 கோடிக்கும் அதிகமாக ஜி.எஸ்.டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக நாளை, பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களைச் சந்திக்கின்றார்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலையினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, இன்று 7வது முறையாக தளர்வுகளுடன் நீட்டிக்கக்கப்பட்டுள்ளது. கடந்த மே 24ம் திகதி முதல் ஒவ்வொரு வாரமும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதன்போது பல்வேறு விடயம் குறித்துப் பேசினார் அதில் :

மற்ற கட்டுரைகள் …