free website hit counter

பூஸ்டர் தடுப்பூசி சேவை கட்டணம் - தனியார் மையங்களுக்கு மத்திய அரசு அனுமதி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட சேவை கட்டணமாக ரூ.150 வசூலிக்க தனியார் மையங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷண், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் கூட்டத்தை காணொலிக்காட்சி வழியாக கூட்டி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது வெளியிடப்பட்ட முக்கிய தகவல்கள் பின்வருமாறு:-

தடுப்பூசிகள் ஏற்கனவே செலுத்திக்கொண்டவர்கள் பற்றிய தகவல்கள் கோவின் தளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்காக புதிதாக பதிவு செய்ய தேவையில்லை. ஆன்லைனில் அப்பாயிண்ட்மென்ட் பெற்று தடுப்பூசி போட்டாலும், மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து தடுப்பூசி செலுத்தினாலும் அனைத்து தடுப்பூசிகளும் கோவின்தளத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு, தடுப்பூசி விலையுடன் தனியார் தடுப்பூசி மையங்கள் சேவைக்கட்டணமாக ரூ.150 வசூலித்துக்கொள்ளலாம்.

முதல் 2 டோஸ் தடுப்பூசியாக எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ (கோவிஷீல்டு அல்லது கோவேக்சின்) அதே தடுப்பூசிதான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகவும் செலுத்தப்படும். 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதையும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் போடுவதையும் மாநிலங்கள் விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்தப்பட்டன.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: