free website hit counter

பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார் !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழறிஞர், பேராசிரியர் சாலமன் பாப்பையா இன்று இயற்கை எய்தினார். மதுரை மாவட்டம்  சாத்தங்குடியில், 1936-ம் ஆண்டு பிறந்த சாலமன் பாப்பையா, பேராசியர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகத் தன்மை கொண்ட தமிழறிஞர். திருக்குறள், கம்ப ராமாயணம் முதலியவற்றுக்கு பொருளுரையும் எழுதியுள்ளார். 

ஆயினும் அவருக்கு உலகம் முழுவதும் பெருமைதேடிக் கொடுத்தது அவரது பட்டிமன்றங்கள் என்றால் மிகையில்லை. தமிழ்மக்களால் நன்கு நேசிக்கப்பட்ட அவரது மறைவு தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

அவரது மறைவுக்கு அரசியல்கட்சித் தலைவர்கள், சினிமாத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula