free website hit counter

2022 ஆம் ஆண்டின் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் - முகேஷ் அம்பானி முதலிடம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
2022-ம் ஆண்டுக்கான  உலக  பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வணிக பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இதில், இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

உலக பணக்காரர்கள்  பட்டியலில் மொத்தம் 2,668 பேர்  இடம்பெற்றுள்ளனர். சுமார் 219 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது சொத்து மதிப்பாக கொண்டுள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உலக பணக்காரர்களில்  முதலிடத்தில் உள்ளார்.அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 171 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியலில்  பத்தாவது இடத்தில் உள்ளார் முகேஷ் அம்பானி உள்ளார்.

உலக அளவில் பணக்காரர்கள்  அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் முதல் 10  பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி  முதல் இடத்தில் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 90.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 

2வது இடத்தில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வரும் அதானி குழும நிறுவனர் கவுதம் அதானி உள்ளார். அவரது சொத்து மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 

3வது இடத்தில் தமிழகத்தில் பிறந்தவரான எச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 28.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

4வது இடத்தில் டி-மார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி உள்ளார். அவர் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பை வைத்துள்ளார். 

5வது இடத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனவல்லா உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 24.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 

6வது இடத்தில் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத் தலைவராக உள்ள லட்சுமி மிட்டல் 17.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பை வைத்துள்ளார்.

7வது இடத்தில் ஓ.பி.ஜிண்டால் குழும தலைவர் சாவித்திரி ஜிண்டால் உள்ளார். மொத்தம் 17.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பை வைத்துள்ளார்.

8வது இடத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா 16.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார். 

9வது இடத்தில் மருந்துகளை தயாரித்து வரும் சன் பார்மா நிறுவனர் திலீப் சாங்க்வி 15.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார். 

10வது இடத்தில் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டாக் 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction