free website hit counter

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று இரவு 08.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன் நேற்றிரவு வெளியாகிய 2021 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தனது சாதனை தொடர்பாக அவர் கூறுகையில்,

"நான் சூம் வகுப்பினூடாக எனது படிப்பினை மேற்கொண்டேன். எனது அம்மா ஆசிரியர், அப்பா வியாபாரம் செய்கிறார்.

எனது அம்மா மற்றும் அப்பா ஊக்கமளித்ததன் காரணமாகவும் எனது பாடசாலையின் வகுப்பாசிரியர் மற்றும் எனது ஆசிரியர்களின் ஊக்கத்தின் காரணமாகவே இந்த பெரு வெற்றியைப் பெற முடிந்தது.

அத்தோடு எதிர்காலத்தில் நான் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன்" என்று அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ளதாகச் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 06 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை விலை 725 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இலங்கை கடும் டொலர் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், வர்த்தக வங்கிகளால் கடனுதவி வழங்கப்படாமையால் மூன்று எரிவாயு தாங்கிகள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …