அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து தன்னால் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் உள்ளதாக யாழ் மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன இராமநாதன் பாராளுமன்ற அதிகாரிகளிடம் தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் இன்று ஆரம்பமான திசையமைப்பின் முதல் நாளின் போது பாதுகாப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பொது பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
கைத்துப்பாக்கி மற்றும் பாதுகாப்பை வழங்குவது பாராளுமன்ற (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தின் கீழ் முழுமையாக உள்ளடக்கப்படவில்லை என்றும் பொது பாதுகாப்பு அமைச்சு பொறுப்பு வகிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சின் மதிப்பீட்டின்படி பொலிஸ் பாதுகாப்பு அல்லது கைத்துப்பாக்கியைப் பெறுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.