free website hit counter

குருகிராம் நில வழக்கு தொடர்பாக தொழிலதிபர் ராபர்ட் வாத்ரா, தனது மனைவியும், வயநாடு எம்.பி.,யுமான பிரியங்காவுடன் வந்து அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.

இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்தது வரம்பு மீறிய செயல் என குறிப்பிடுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியில் யானை சின்னம் பயன்படுத்துவதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி அக்கட்சி தலைவர் விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறபித்த உச்சநீதிமன்றத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம் என தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜக வை தோற்கடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு குற்றங்களை தடுக்கும் நிர்வாகத் திறன் என்பது தான் துளியும் இல்லையே? என்று அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டியுள்ளார்.

அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகம் வேகமாக மாறி வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, உயர்கல்வியில் பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: