மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ATM-களில் போதுமான அளவு விநியோகிக்கப் படுவதை உறுதி செய்திட வேண்டும் என வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்திற்குள் 75 சதவீத ATMகளில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் 2026 மார்ச் மாதத்திற்குள் இதனை 90% ஆக உயர்த்த வேண்டும் எனவும் வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ATMகளில் அதிகளவில் ரூ.500 நோட்டுகள் மட்டும் விநியோகிக்கப் படுவதால், அதனை ரூ. 100, ரூ.200 நோட்டுகளாக மாற்றுவதற்கு மக்கள் சிரமங்கள் சந்திக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.