free website hit counter

தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: இந்திய அரசு அறிவிப்பு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1931ம் ஆண்டுக்குப் பிறகு 2011ம் ஆண்டு சமூக பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட சாதிவாரி சமூக நிலை குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. 2021 ல் நடக்கவேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தன.

இந்நிலையில் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்,
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து அறிவித்தார். அப்போது; தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி விவரங்களும் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula