free website hit counter

சுவிற்சர்லாந்தின் தென்பகுதியில் தொடரும் கன மழைகாரணமாக, இரண்டு நாட்களுக்கு முன்பு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அதே இடத்தில், மற்றொரு பெரிய மண்சரிவு ஏற்பட்டு, A2 நெடுஞ்சாலையில் விழுந்தது. இதனால் நெடுஞ்சாலைப் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தின் தென்பகுதியை நேற்றுப் பலமாகத் தாக்கிய கன மழையில் பெரும்பாலன சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் ஒரு மணிநேரம் பலமாகத் தாக்கிய கன மழையில் திடீரெனச் சாலைகளில் பெருவெள்ளம் தோன்றியது.

இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி சென்ற வியாழக்கிழமை நாட்டின் சுகாதார நன்மைக்காக 'கிரீன்பாஸ்' திட்டத்தின் விரிவாக்கத்தை அறிவித்தார்.

உலகை அச்சுறுத்திய கோவிட் -19 வைரஸின் புதிய மாறுபாடான டெல்டா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் பரவி வருகின்றது.

இத்தாலியில் ஆகஸ்ட் 6ந் திகதி முதல் உணவகங்கள், ஜிம்கள், சினிமாக்கள் மற்றும் பலவற்றிற்கு கோவிட் 'கிரீன் பாஸ்' கட்டாயமாக்குகிறது. இதற்கான புதிய ஆணையின் கீழ் வியாழக்கிழமை கையெழுத்திட்ட பின், சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் பெருநிகழ்வுகளில், நோயெதிர்ப்பு இல்லாத பங்கேற்பாளர்கள் அதிகமாக இருப்பதால், பெருந்தொற்றின் ஆபத்து அதிகமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: