சுவிற்சர்லாந்தில் கடந்த வாரம் நிலவிய கனமழைகாலநிலை மாறி சீராகி வரும் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் புயல் மற்றும் கனத்த மழையும் பெய்யலாம் என சுவிஸ் வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
சுவிஸ் வானிலை ஆய்வு நிறுவனத்தின் கணிப்பின்படி, வார இறுதியில் சுவிஸின் அதிக இடங்களில், 100 லிட்டர் மழை பெய்யும் எனவும், தென்பகுதியில் அது 120 லீட்டர்வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரக் கன மழையால் ஈரமாகியுள்ள நிலம் இந்தப் பெரும் நீரை உறிஞ்சுவதில் சிரமம் இருக்கும் எனவும், இது சிக்கலைத் தோற்றுவிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
இத்தாலியில் கோவிட் -19 தளர்வுகள் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் ?
மேலும் தற்போது சுவிஸிலுள்ள நதிகள் மற்றும் ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில், புதிதாக வரும் கூடுதல் நீர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை மலைகளில் இருந்து அதிக காற்று வீசக்கூடும் என்றும், காற்றின் போக்கில் ஏற்படக் கூடிய மாற்றங்களை தற்போது துல்லியமாகக் கணிக்க முடியாதுள்ளதாகவும், அதனால் மோசமான நிலை உருவாகமலும் போகலாம். ஆயினும் மக்கள் எப்போதும்,
ஏரிகள் மற்றும் ஆறுகளிலிருந்து விலகி இருப்பது நல்லது என வலியுறுத்தப்பட்டுள்ளது.