free website hit counter

ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், பரீட்சை ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கைதி ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக கடந்த 28ஆம் திகதி இரவு முதல் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாளை பாரிய எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …