சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இலங்கை மீன்பிடி இழுவை படகு மற்றும் அதன் பணியாளர்களை விடுவிக்க 39 நாடுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கடல் படையிடம் இலங்கை உதவி கோரியுள்ளது.
இதன்படி, படகை மீட்பதற்காக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பஹ்ரைனை தளமாகக் கொண்ட ஒருங்கிணைந்த கடல்சார் படையினரிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (ஜனவரி 27) அன்று, ‘லொரென்ஸோ புத்தா 4’ என்ற இழுவைப்படகு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டதாகவும், அதில் இருந்த ஆறு பணியாளர்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.