கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், 14 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் எனக் கோரி சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
சஜித்துக்கு கொரோனா தொற்று; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்காணிப்பில்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், அவரது பாரியாரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதாரத்துக்காக மக்கள் உயிர்களை பலியிடாதீர்கள்: ரணில்
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது குறித்த மருத்துவ ஆலோசனையை அரசாங்கம் பெறவேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அதிகரிக்க அரசாங்கமே காரணம்: இரா.சம்பந்தன்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்திருப்பதற்கு ஆளும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராஜபக்ஷக்கள் இலங்கையை சீனாவின் கொலணியாக்கிவிட்டனர்; சந்திரிக்கா காட்டம்!
ஆளும் ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கையை சீனாவின் கொலணியாக்கிவிட்டது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பு; ஐ.நா.வுக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி கடந்த 12ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்து எதிர்க்கட்சி வரிசையிலுள்ள தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.
கொழும்பு துறைமுக நகரச் சட்டம் நாட்டின் இறையாண்மைக்கு அடி: சஜித்
கொழும்பு துறைமுக நகரச் சட்டம் நாட்டின் இறைமைக்கு பாரிய அடி என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.