free website hit counter

காய்கறி விலை: வீட்டுத்தோட்டம் அமைக்க பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பெய்த கடும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக தற்போது மரக்கறிகளுக்கு அதிக விலை அறவிடப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர் கனமழையால் இதுபோன்ற நிலை ஏற்படும் என முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தேன்.எனவே, மிளகாய், தக்காளி, பல்வேறு கீரைகள் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கொண்ட வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களை அமைச்சர் ஊக்குவித்தார்.

"விலைவாசி உயர்வுக்காக என்னையும், விவசாய அமைச்சகத்தையும் பலர் திட்டுகிறார்கள். கனமழையால் காய்கறி தோட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது." என்றார்.

இதற்கு தீர்வாக வீட்டுத்தோட்டத்தை பராமரிப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula