உப்பு பதுக்கி வைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்
அம்பாந்தோட்டை லங்கா சால்ட் கம்பனியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.நந்தன திலக்க, உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் பீதியடைந்து உப்பை வாங்கி பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.