உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜயசுந்தர, மாணவர்கள் தமது கற்கைகளை தொடரும் வேளையில் மதிப்பீட்டுச் செயற்பாடுகள் பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். முடிவுகளை இறுதி செய்ய பொதுவாக நான்கு மாதங்கள் ஆகும் என்று குறிப்பிட்ட அவர், இந்த காலக்கெடுவை குறைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
"ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுகளை வெளியிட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார். (நியூஸ் வயர்)