free website hit counter

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் மக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் அரசியற் பொருளாதாரக் குழப்பங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ள நிலையில், பிரதமர், ஜனாதிபதி, பதவி விலகவேண்டும் என ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வாக 600 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் அனைத்துப் பாடசாலை ஆசிரியர்களும் பணிதவிர்ப்புப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். அரசின் பொருளாதார கொள்கை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள அடையாளப் போராட்டமாக இதனை அறிவித்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இன்று காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்ப் பேரணியொன்று நடைபெறுகின்றது.

காலி முகத்திடலில் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பை முன்னெடுத்திருந்த தெரிப்பேஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …