2024/25 மகா பருவத்திற்கான நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை ஹெக்டேர் ஒன்றிற்கு ரூபா 15,000 இலிருந்து ரூபா 25,000 ஆக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் மீனவ சமூகங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.