பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்
அநுராதபுரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) மதியம் யாழ்ப்பாணத்தில் விசேட பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.