இத்தாலிய அணி கோல் கீப்பரின் வெற்றிகரமான தடுப்பில், 3: 2 ( 4-3 ) எனும் பெனால்டிக் கோல்களில் இத்தாலிய அணி, " யூரோ - 2020 " வெற்றிக் கோப்பையை வெம்பிளி அரங்கிலிருந்து சுவீகரித்துக் கொண்டது.
இத்தாலி மற்றும் இங்கிலாந்து " யூரோ- 2020 " இறுதி மோதலில் ! யார் வெல்வார்கள் ?
'யூரோ- 2020' கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்னும் சில மணித்துளிகளில் இலண்டன் வெம்பிளி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா இலங்கை இடையிலான சுற்றுப்போட்டி ஒத்திவைப்பு
இந்தியா மற்றும் இலங்கை இடையே நடைபெற இருந்த டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளின் திகதிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தொடரும் இங்கிலாந்தின் வேட்டை
தொடர்ச்சியாக வெற்றிகளையே சுவைத்துக்கொண்டிருக்கும் இங்கிலாந்திற்கு இன்னுமொரு இலகுவான வெற்றி. நேற்று நடைப்பெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 141 ரன்களை எடுத்தது.
இலங்கை அணியின் புதிய தலைவராக தசுன் சானக
இலங்கை அணியின் புதிய தலைவராக சகலதுரை ஆட்டக்காரர் தசுன் சானக தெரிவாகியுள்ளார். ஆகவே எதிர்வரும் இந்தியாவுடனான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இவரே இலங்கையணிக்கு தலைவராக செயற்படுவார்.
டென்மார்க்கின் அழகான ஆட்டம் அலங்கோலமாகிய அரையிறுதிப் போட்டி !
இலண்டன் வெம்பிளி மைதானத்தில் இன்றிரவு நடைபெற்ற ' யூரோ - 2020 ' வெற்றிக் கோப்பைக்கான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பலமான அணிகளான இங்கிலாந்தும், டென்மார்க்கும் களமாடின. ஆரம்பத்தில் விறு விறுப்பாக அமைந்த ஆட்டம் நேரம் செல்லச் செல்ல பதற்றம் நிறைந்த ஆட்டமாக மாறியது.
"கோபா அமெரிக்கா 2021" இறுதி போட்டியில் ஆர்ஜென்டினா !
கோபா அமெரிக்கா 2021 கால்பந்து தொடரின் 2வது அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு ஆரம்பித்தது. 2வது அரையிறுதியில் ஆர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் மோதின.