free website hit counter

வெள்ளி பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் ரவி தாஹியாவுக்கு குவியும் வாழ்த்துகள்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

13வது நாளாக நடந்துவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீரரான ரவி தாஹியா வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார்.

ஜப்பானின் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகள் 13வது நாளாக நடந்துவருகிறது. இதில் 57 கிலோ பிரிவு ஆடவர் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இறுதிப்போட்டிவரை தகுதி பெற்று முன்னேறிய தாஹியா நடப்பு உலக சாம்பியனான ரஷ்யாவின் ஜாவுர் உகுவேவ் இடம் 4-7 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் வெள்ளிப்பதக்கம் அவருக்கு கிடைத்துள்ளது. இது இந்தியா பெறும் 2வது வெள்ளிப்பதக்கமாக உள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்த போட்டியில் சுசில் குமாருக்கு அடுத்து வெள்ளி பதக்கம் வென்ற 2வது இந்தியர் தாஹியா இருப்பது குறிப்பிடதக்கது.

இதேவேளை ஜெர்மனிக்கு எதிராக களமிறங்கிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 எனும் கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றது. 41 ஆண்டுகளுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் இந்திய அணி பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ளது.

இந்நிலையில் இந்தியா இதுவரை 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் அடங்களாக மொத்தம் 5 பதக்களை டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்றுள்ளது. இதேவேளை ஒலிம்பிக் பதக்க பட்டியலில் சீனா தொடர்ந்து முதலாம் இடத்திலும் இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் மூன்றாம் இடத்தில் ஜப்பானும் முன்னிலை வகுத்துவருகின்றன.

இந்நிலையில் பல்வேறு தலைவர்கள் உட்பட அனைவரும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துவருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction