free website hit counter

ஐபிஎல் இல் அவுஸ்திரேலிய வீரர்கள் விளையாடுவார்களா?

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பரில் திட்டமிடப்பட்டுள்ள ஐபிஎல் இல் அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில், அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பதில் சந்தேகம் தொடர்ந்தது. எனினும், தற்போது டி20 உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தலுக்காக, IPL தொடரில் வீரர்கள் விளையாடுவதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் பெட் கம்மின்ஸின் மனைவி முதல் குழந்தையை பிரசவிக்கவுள்ளதால், இவர் விளையாடமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், முழங்கை உபாதைக்கு முகங்கொடுத்து, மே.தீவுகள் மற்றும் பங்களாதேஷ் தொடரிலிருந்து நீக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் தொடரில் விளையாடுவதும் சந்தேகம் தான். இந்தநிலையில், இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்ற போது, அணிகளிலிருந்து விலகிய வீரர்கள் மீண்டும், விளையாடமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஜோஸ் ஹெஷல்வூட், மிச்சல் மார்ஷ் மற்றும் ஜோஸ் பிலிப்பி ஆகியோர் மீண்டும் தங்களுடைய அணிகளில் இணைவார்கள் எனும் எதிர்ப்பார்ப்பும் பரவலாக காணப்படுகின்றது. அதேநேரம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது, டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவிருந்தது. எனினும், கொவிட்-19 தொற்று காரணமாக இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: