free website hit counter

ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகும் அவிஷ்க குணவர்தன

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை அ‌ணி‌யி‌ன் முன்னால் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் அவிஷ்க குணவர்தன, ஆப்கானிஸ்தான் ஆடவர் அணிக்கு துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவிஷ்க குணவர்தனவை நீண்ட காலப்பகுதிக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை  விரும்பினாலும் அவிஷ்க குணவர்தன எதிர்வரும்  பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒரு நாள் தொடருக்கு மாத்திரமே செயற்பட முடியும் என உறுதி செய்துள்ளார்.

பாகிஸ்தான் ம‌ற்று‌ம் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கெதிரான ஒரு நாள் தொடர் இலங்கையில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணி எப்போது இலங்கைக்கு விஜயம் செ‌ய்யு‌ம் என்பது தீர்மானமில்லாமல் இருக்கும் வகையில் எதிர்வரும் செப்டம்பர் மாதப்பகுதியில் இந்த ஒரு நாள் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலிபான் ஆக்கிரமிப்பினால் காபுல் விமான நிலையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஆப்கானிஸ்தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula