மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2022க்கான அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம்
இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 05 நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் ஏற்கனவே உலக கிண்ணத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இதேவேளை தகுதிகாண் தொடரில் பங்கெடுக்கும் அணிகளாக இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், அயர்லாந்து, தாய்லாந்து, பபுவா நியூ கினியா, ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து, மற்றும் ஜிம்பாப்வே ஆகியவற்றின் மகளிர் கிரிக்கெட் அணிகள் காணப்படுகின்றன. இந்த அணிகளில் இருந்து மூன்று அணிகள் உலக கிண்ணத்தில் விளையாடும் தகுதியை பெறும்.
அதோடு இந்த மகளிர் உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணையானது விரைவில் வெளியிடப்படும் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது. இதேநேரம், 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தொடர் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 03ஆம் திகதி வரை நியூசிலாந்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.