free website hit counter

ஐக்கிய அரபு இராச்சிய உஷ்ணத்திற்கு தயாராகும் இலங்கை அணி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தொடரில் பங்கெடுக்கவிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி ஓமான் அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் டி20 உலககிண்ணப்போட்டிகள் நடைப்பெறவுள்ளதால் அந்த இடத்தின் உஷ்ண காலநிலை தன்மைக்கு ஏற்ப தம்மை தயார்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே இலங்கை கிரிக்கெட் அணி, ஓமான் அணியுடன் T20 பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் இலங்கை மற்றும் ஓமான் அணிகள் மோதும் இரண்டு டி20 பயிற்சிப் போட்டிகளும் ஒக்டோபர் 07ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் ஓமானின் அமராத் மைதானத்தில் நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரம் T20 உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அதன் முதற்சுற்றில் குழு A இல் காணப்படும் நெதர்லாந்து, நமீபியா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் மோதி உலக கிண்ணத்திற்கு தகுதி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula