free website hit counter

வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ்.கதிரேசன். இதில் 'ஆடுகளம்' படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது.

அதேபோல், டைரக்டர் வெற்றிமாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் சார்பில், 'உதயம்', 'காக்கா முட்டை', 'விசாரணை', 'வட சென்னை' போன்ற நல்ல படங்களைத் தயாரித்தார்.'காக்கா முட்டை' தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றது. 'விசாரணை' தேசிய விருது பெற்றதுடன் அகடமி விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படமாகத் தேர்வானது.

இப்போது இந்த ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் - கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ‘அதிகாரம்’ என்று பெயரிட்டுள்ளனர்.. இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் - வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, இந்திய் ஆகிய மொழிகளில் உருவாகும் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஏற்கனவே இவர் இதே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், எஸ்.கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ என்ற படத்தில் லாரன்ஸ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ‘அதிகாரம்’ படத்தின் படபிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும். மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் படபிடிப்பு நடைபெறும்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: