இந்தியாவில் மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு அமெரிக்காவில் சென்று வேலை இந்திய இளைஞர்கள் குறித்த விமர்சனத்தை வைத்தது 1999-ல் வெளியான ‘டாலர் ட்ரீம்ஸ்’.
தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியான இந்தப் படத்தின் மூதல் இயக்குநராக அறிமுகமானவர் சேகர் கம்முலா. இந்தப் படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றார். இவர், தற்போது நடிப்புக்காக இருமுறை தேசிய விருதை பெற்ற தனுஷை இயக்குகிறார். இது தனுஷ் தெலுங்கில் நேரடியாக நடிக்கும் முதல் படம். விமர்சனம் மற்றும் வசூல் ஆகிய இரு அம்சங்களிலும் வரவேற்பைப் பெறும் வணிக ரீதியான வெற்றிகளின் படங்களை இயக்குவதில் கம்முலா திறமையாளர்.
இன்னும் தலைப்பு வைக்கப்பாடாத இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியிடப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நாராயண் தாஸ் கே நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படுகிறது.
இதர தொழில்நுட்ப மற்றும் கதாபாத்திர தேர்வுகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தனுஷின் தாய்மொழி தெலுங்கு என்பதால், இவருக்கு தெலுங்கு பேசி நடிப்பதில் சிரமம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.