இரண்டு புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
முன்னாள் விளையாட்டு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    