2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும், 2023 G.C.E சாதாரண தரப் பரீட்சையை 2024 மே அல்லது ஜூன் மாதங்களில் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரேமஜயந்த குறிப்பிட்டார்.