தற்போதைய அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
"'அரகலய' மூலம் கிரீடம் [ஜனாதிபதி] பெற்ற தற்போதைய ஜனாதிபதி, நேற்று அவரது உண்மையான தன்மையை மிகத் தெளிவாகக் காட்டினார். ஊழலுக்கு எதிராக பேசிய அமைச்சரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஊழல்வாதிகளுடன் நின்றார்” என வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தானும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் இதேபோன்று அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை நினைவுகூர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், அதுவே ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவியின் விலகலுக்கு ஆரம்பம் என குறிப்பதாகக் கூறினார்.
இரண்டு சம்பவங்களுக்கிடையில் ஒற்றுமைகளை வரைந்த வீரவன்ச, ரணசிங்கவின் பதவி நீக்கம் ஜனாதிபதி யாருடைய பக்கம் என்பதை தெளிவாகக் காட்டியது என்றும், இதன் மூலம் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி பதவியும் முடிவுக்கு வரும் என்றும் வீரவன்ச மேலும் முன்வைத்தார்.
"ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என நான் கூறுகிறேன். அவர் போட்டியிடுவார் என்று நினைப்போரை எண்ணி நான் பரிதாபப்படுகிறேன். அவர் ஒரு சர்வதேச நிறுவனத்தில் உயர் பதவியை ஏற்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. அவரது குறுகிய ஆட்சி காலத்தில் இந்த நாட்டுக்கு நீதி கிடைக்காது. அவர் தனது பதவிக்காலத்தில் தனது தனிப்பட்ட லாபத்தை மட்டுமே தேடுவார்.” எனவும் குறிபிட்டார்.