விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவரது அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 2022 இல் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவும் நீர்ப்பாசன அமைச்சராகவும் ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், கிரிக்கெட் விளையாட்டு மற்றும் இலங்கை கிரிக்கெட் (SLC) தொடர்பான நெருக்கடி காரணமாக ஜனாதிபதிக்கும் ரொஷான் ரணசிங்கவிற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டில் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியதன் காரணமாக, ஜனாதிபதி தம்மை குற்றஞ்சாட்ட முயற்சிப்பதாக ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியதை அடுத்தே இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.