free website hit counter

சிறப்பு ரயில் மற்றும் பேருந்து சேவைகள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பொதுமக்களின் வசதிக்காக இன்று விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கொழும்பு திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக இன்று விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நேற்று (16) முதல் விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பதுளை, பெலியத்த மற்றும் காலியில் இருந்து கொழும்பு நோக்கி இன்றும் சில விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு திரும்பும் பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் பெருமளவான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction