free website hit counter

வெற்றிக்காகப் போராடிய எனது உடல் சோர்வடைந்துவிட்டது; ஓய்வை அறிவித்தார் மலிங்க!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும் முன்னாள் அணித்தலைவருமான லசித் மலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். 

பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நடப்பு உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்ததும், இரசிகர்களுக்காக மேலும் ஒரு தொடரில் விளையாடியவுடன் அவர் ஓய்வெடுப்பதாக அறிவித்துள்ளார்.

 

“நான் அணியின் வெற்றிக்காக மிகவும் போராடினேன். ஆனால் எனது உடல் தற்போது சோர்வடைந்து விட்டது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் நான் விளையாட எதிர்பார்த்துள்ளேன். எனினும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே அது தொடர்பான உறுதியான தகவல்களை வெளியிட முடியும்.” என்றும் லசித் மலிங்க குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உலகக் கிண்ணத் தொடர் நிறைவுபெற்றதும், சர்வதேச கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளைாயடி விடைபெற வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகவுள்ளது. அதன்படி பங்களாதேஷ் அல்லது நியூஸிலாந்து அணியுடானான போட்டி எனது இறுதி தொடராக அமையலாம்.

நுவான் குலசேகர சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடம்பிடித்த இலங்கையின் முதல் வீரர் என்ற பெருமையை உடையவர். நான் அவருடன் 10 ஆண்டுகளாக இணைந்து விளையாடியுள்ளேன். எனவே அவருடன் இணைந்து ஒரு தொடரில் விளையாடியதன் பின்னர் நான் ஓய்வு பெற எதிர்பார்த்துள்ளேன். அதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்பேன்.

எனக்கு தற்போது 36 வயதாகிறது. போட்டிகளில் விளையாடுவதற்கான சக்தி என்னிடம் குறைவாக காணப்படுகின்றது. அதனால் எதிரணியினரை வீழ்த்துவது சவால் மிக்கதொன்றாக காணப்படுகின்றது.

நாங்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கடந்த காலங்களில் 2, 3 மற்றும் நான்காவது இடத்தில் இருந்தோம் ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. அதை எண்ணி நான் மிகுந்த வேதனை அடைகின்றேன். எனவே நான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் தரவரிசைப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் எமது அணியை 7வது இடத்துக்கு முன்னேற்றினால் மகிழ்ச்சியைடைவேன்.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் நேரடியாக விளையாடுவதற்கான தகுதியை நாம் இழந்துள்ளோம். எனவே தான் நான் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி அந்த தகுதியை அணிக்காக பெற்றுக் கொடுத்ததன் பின்னர் ஓய்வு பெற வேண்டும் என எதிர்பார்த்துள்ளேன்.” என்றுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula