பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் நிதியுதவியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட 15 அமைப்புகள் மீதான தடையைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் ஒரு அசாதாரண வர்த்தமானியைப் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொண்டா கையொப்பமிட்ட இந்த வர்த்தமானியில், இந்த அமைப்புகள் பயங்கரவாதத்திற்கு மீண்டும் மீண்டும் நிதி உதவி அளித்ததாகக் கூறுகிறது. இதன் விளைவாக, அவற்றின் நிதி மற்றும் பொருளாதார சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
நீட்டிக்கப்பட்ட தடைக்கு கூடுதலாக, பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 222 நபர்களின் பட்டியலையும் அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
1. Liberation Tigers of Tamil Eelam (LTTE) 2. Tamil Rehabilitation Organization (TRO) 3. Tamil Coordinating Committee (TCC) 4. World Tamil Movement (WTM) 5. Transnational Government of Tamil Eelam (TGTE) 6. World Tamil Relief Fund (WTRF) 7. Headquarters Group (HQ Group) 8. National Thowheed Jama’ath (NTJ) 9. Jama’athe Milla’athe Ibrahim (JMI) 10. Willayath As Seylani (WAS) 11. National Council of Canadian Tamil (NCCT) 12. Tamil Youth Organization (TYO) 13. Darul Adhar Ath’thabawiyya 14. Sri Lanka Islamic Student Movement (S.L.I.S.M) 15. Save the Pearls