இலங்கை தபால் திணைக்களம், பிரஜைகளுக்கு தங்களின் சொந்த புகைப்படங்கள் அல்லது நிகழ்வுகளை உள்ளடக்கிய தபால்தலைகளை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பை 2000 ரூபாயுடன் உருவாக்குவதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.
ஹட்டன் நேஷனல் வங்கியின் (HNB) முத்திரையை வெளியிடுவதற்காக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், திருமணங்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் விருந்துகள் போன்ற விசேட சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப தமது சொந்த புகைப்படங்களுடன் 20 முத்திரைகள் கொண்ட முத்திரைத் தாளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்தார்.
தம்பதிகளின் புகைப்படங்களைக் கொண்ட இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் குடும்பங்கள் தங்கள் திருமண அட்டைகளின் தனித்துவத்தை அதிகரிக்கலாம். இந்த முத்திரைகள் தபால் தலைகளாகவும் செயல்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.