free website hit counter

வாகன இறக்குமதியில் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்: இறக்குமதியாளர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வாகன இறக்குமதிக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் விளம்பரம் செய்த போதிலும், அவ்வாறான கூற்றுக்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

கட்டுப்பாடுகளுடன் கூடிய வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்ற அதேவேளை, அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, கடந்த அமைச்சரவை மாநாட்டிற்கு முன்னதாக ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை அறிவித்தார். அதற்கமைவாக சில கட்டுப்பாடுகளின் கீழ் வாகன இறக்குமதியை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

"ஒரு அரசாங்கம் என்ற வகையில், வாகன இறக்குமதி தொடர்பான முடிவுகளை நாங்கள் கவனமாக அணுகுகிறோம், நமது இருப்பு மற்றும் நமது பொருளாதாரத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை எடுக்க நாங்கள் தயாராக இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: